20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதில் வெற்றி


20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதில் வெற்றி
x
தினத்தந்தி 28 Jun 2021 12:12 AM GMT (Updated: 2021-06-28T05:42:39+05:30)

20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதில் வெற்றி பெற்றது.

கிரனடா,

வெஸ்ட் இ்ண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது ஆட்டம் கிரனடாவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக வான்டெர் துஸ்சென் 56 ரன்களும், குயின்டான் டி காக் 37 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை சுவைத்தது. உள்நாட்டில் 160 ரன்கள் மேலான இலக்கை வெஸ்ட் இண்டீஸ் விரட்டிப்பிடித்திருப்பது இது 2-வது நிகழ்வாகும். 22 பந்துகளில் தனது 7-வது அரைசதத்தை எட்டிய தொடக்க ஆட்டக்காரர் இவின் லிவிஸ் 71 ரன்கள் (35 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார். மற்றொரு தொடக்க வீரர் ஆந்த்ரே பிளட்சர் 30 ரன்களில் ரன்-அவுட் ஆனார். கிறிஸ் கெய்ல் 32 ரன்களுடனும் (24 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), ஆந்த்ரே ரஸ்செல் 23 ரன்களுடனும் (12 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.


Next Story