இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி தோல்வி


இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி தோல்வி
x

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வியடைந்தது.

பிரிஸ்டல்,

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 201 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. தனது 56-வது அரைசதத்தை நிறைவு செய்த கேப்டன் மிதாலிராஜ் அதிகபட்சமாக 72 ரன்கள் (108 பந்து, 7 பவுண்டரி) எடுத்தார். அறிமுக வீராங்கனையாக அடியெடுத்து வைத்த ஷபாலி வர்மா 15 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். என்றாலும் 17 வயதான ஷபாலி, மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் குறைந்த வயதில் அறிமுகமான இந்தியர் என்ற சிறப்பை பெற்றார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 202 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றி பெற்றது. டாமி பீமோன்ட் (87 ரன்), நதாலி சிவெர் (74 ரன்) அரைசதம் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் நாளைமறுதினம் நடக்கிறது.

Next Story