இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக 3 நாள் பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடுகிறது இந்தியா


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக 3 நாள் பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடுகிறது இந்தியா
x
தினத்தந்தி 2 July 2021 11:33 PM GMT (Updated: 2021-07-03T05:03:14+05:30)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி 3 நாள் பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடுகிறது.

லண்டன்,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு ஒரு மாதத்திற்கு மேலாக இருக்கும் நிலையில் தங்களுக்கு பயிற்சி ஆட்டம் இல்லாதது குறித்து இந்திய கேப்டன் விராட்கோலி அதிருப்தி தெரிவித்து இருந்தார். இதையடுத்து பயிற்சி ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்து தரும்படி இந்திய கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்தை வலியுறுத்தியது. இந்த நிலையில் இந்தியாவின் வேண்டுகோளை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது. வருகிற 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 3 நாள் பயிற்சி போட்டி நடைபெறும் என்றும், இந்தியாவை எதிர்த்து கவுண்டி செலக்ட் லெவன் அணி விளையாடும் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story