இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெறுமா?


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெறுமா?
x
தினத்தந்தி 3 July 2021 12:57 AM GMT (Updated: 2021-07-03T06:27:14+05:30)

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றியை பெறுமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வார்செஸ்டர்,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் போராடி டிரா செய்த இந்திய அணி, அந்த அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் அடுத்தடுத்து தோல்வி கண்டு தொடரை இழந்தது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வார்செஸ்டரில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறுமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story