3-வது ஒருநாள் மகளிர் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு


3-வது ஒருநாள் மகளிர் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 3 July 2021 12:02 PM GMT (Updated: 3 July 2021 12:02 PM GMT)

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி பந்து வீசி வருகிறது.

வார்செஸ்டர்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் போராடி டிரா செய்த இந்திய அணி, அந்த அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் அடுத்தடுத்து தோல்வி கண்டு தொடரை இழந்தது. 

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வார்செஸ்டரில் இன்று நடைபெற்று வருகிறது. மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்தால் ஆட்டம் இரு அணிகளுக்கும் தலா 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன. 

இதைத் தொடர்ந்து போடப்பட்ட டாசில் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 ஒவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 18 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறுமா? என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

Next Story