கிரிக்கெட்

டுவிட்டரில் சர்ச்சை கருத்து: குறைந்த தண்டனையுடன் தப்பினார் ராபின்சன் + "||" + Controversial comment on Twitter: Robinson escaped with lesser sentence

டுவிட்டரில் சர்ச்சை கருத்து: குறைந்த தண்டனையுடன் தப்பினார் ராபின்சன்

டுவிட்டரில் சர்ச்சை கருத்து: குறைந்த தண்டனையுடன் தப்பினார் ராபின்சன்
டுவிட்டரில் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையை கிளப்பியதால் குறைந்த தண்டனையுடன் ராபின்சன் தப்பினார்.
லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 27 வயதான ஆலி ராபின்சன் தனது இளம் வயதில் பெண்களை இழிவுப்படுத்தியும், இனவெறியை தூண்டும் வகையிலும் டுவிட்டரில் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டாலும் உடனடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தியது. இதன் முடிவில் அவருக்கு ரூ.3¼ லட்சம் அபராதமும், 8 போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

இதில் 3 போட்டி தடையை அவர் உடனடியாக அனுபவிக்க வேண்டும். எஞ்சிய 5 ஆட்ட தடை என்பது இரு ஆண்டுகளில் அவரது நடத்தை கண்காணிக்கப்பட்டு அதற்கு ஏற்ப முடிவு செய்யப்படும். ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் அவர் விளையாடவில்லை. அத்துடன் சஸ்செக்ஸ் கவுண்டி அணிக்கான இரண்டு 20 ஓவர் போட்டிகளில் ஆடவில்லை. 

இதனால் 3 ஆட்டம் தடை முடிந்து விட்டது. எனவே அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாட முடியும்.