வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா வெற்றி


வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா வெற்றி
x
தினத்தந்தி 4 July 2021 8:28 AM GMT (Updated: 2021-07-04T13:58:42+05:30)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது.


தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டிசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.  இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றிய நிலையில், 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இதில், முதல் 4 ஆட்டங்களில்   முதல் 4 ஆட்டங்களில் இருஅணிகளும் தலா 2 ஆட்டங்களில் வென்றிருந்தன. இதனால், தொடரை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.  169 ரன்கள் என்ற இலக்குடன்  வெஸ்ட் இண்டிஸ் அணி  20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து  25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இதன்மூலம், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா 3-2 என்ற கணக்கில் வென்றது.


Next Story