கிரிக்கெட்

சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரினார் தினேஷ் கார்த்திக் + "||" + "Got It All Wrong": Dinesh Karthik Apologises For Sexist Comment During Commentary

சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரினார் தினேஷ் கார்த்திக்

சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரினார் தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக், தனது அருவருக்கத்தக்க பேச்சுக்கு வெளிப்படையாக மன்னிப்புக் கோரினார்.

இந்திய கிரிக்கெட் அணி தினேஷ் கார்த்திக், தற்போது கிரிக்கெட் போட்டிகளுக்கான வர்ணணை பணியிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 
 2-வது ஒருநாள் போட்டியின்போது வர்ணணை பணியில் ஈடுபட்டு இருந்த தினேஷ் கார்த்திக், கிரிக்கெட் வீரர்களின் பேட் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

வீரர் பயன்படுத்தும் பேட்டையும், பக்கத்துவீட்டுக்காரர் மனைவியையும் ஒப்பிட்டு தினேஷ் கார்த்திக் பேசிய பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. 

இதையடுத்து, இலங்கை, இங்கிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டியின்போது, வர்ணனையாளர் பணியின்போது, தினேஷ் கார்த்திக், தனது முந்தைய அருவருக்கும் பேச்சுக்கு வெளிப்படையாக மன்னிப்புக் கோரினார்.  உண்மையில் எந்த உள்நோக்கத்துடன் அதைபேசவில்லை எனவும் தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.