கிரிக்கெட்

20 ஓவர் போட்டியில் 79 பந்துகளில் இரட்டை சதம் அடித்து டெல்லி வீரர் சாதனை + "||" + T20 cricket: Delhi’s Subodh Bhati becomes the first player to hit a double century

20 ஓவர் போட்டியில் 79 பந்துகளில் இரட்டை சதம் அடித்து டெல்லி வீரர் சாதனை

20 ஓவர் போட்டியில் 79 பந்துகளில் இரட்டை சதம் அடித்து டெல்லி வீரர் சாதனை
டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சுபோத் பாட்டி உள்ளூரில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி ஒன்றில் 79 பந்துகளில் 205 ரன்கள் குவித்து சாதனைப் படைத்து உள்ளார்.

புதுடெல்லி

டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்கெட் 20 ஓவர்  போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி லெவன் அணி 20 ஓவர் முடிவில் 256 ரன்களை எடுத்தது. இதில் விளையாடிய சுபோத் பாட்டி 79 பந்துகளில் 205 ரன்களை குவித்தார். இதில் 17 சிக்ஸர்களும், 17 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் முதல் முதலாக இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுபோத் பாட்டி.

30 வயதாகும் சுபோத் பாட்டி, அடிப்படையில் ஒரு பவுலர். வலது கை வேகப்பந்து வீச்சாளர். ஆனால், பேட்டிங்கிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டெல்லி அணிக்காக 2015 ஆம் ஆண்டு அறிமுகமான சுபோத் பாட்டி அந்த அணிக்காக ரஞ்சி, சையத் முஷ்டக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பைகளில் விளையாடி வருகிறார்.

சர்வதேச 20 ஓவர்  கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக  அவுட் இல்லாமல் 66 பந்துகளில் 175  ரன்கள் விளாசியிருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் 76 பந்துகளில் 172 ரன்களை விளாசியுள்ளார். அடுத்த இடத்தில் மசகட்சா இருக்கிறார். இவர் அவுட் இல்லாமல் 71 பந்துகளில் 162  ரன்கள் விளாசி இருக்கிறார். இப்போது இவர்கள் ஒட்டுமொத்த சாதனைகளையும் இந்திய வீரர் சுபோத் தகர்த்து சாதனைப்படைத்து இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த வாய்ப்பை இல்லை- ரமீஸ் ராஜா சொல்கிறார்
இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த வாய்ப்பை இல்லை- ரமீஸ் ராஜா சொல்கிறார்
2. அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார்: இந்திய கிரிக்கெட் வாரியம்
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வதந்தியை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
3. கொரோனா பாதிப்பு எதிரொலி: இந்தியாவுடனான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து- இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்தியாவுடனான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
4. போட்டியின் போது ஓவல் மைதானத்திற்குள் நுழைந்த யூடியூப் பிரபலம்; இது மூன்றாவது முறை
முன்பு லார்ட்ஸ் மற்றும் லீட்ஸ் மைதானங்களில் டெஸ்ட் போட்டி நடைபெற்ற போதும் மைதானத்தில் யூடியூப் பிரபலம் ஜார்வோ அத்துமீறி நுழைந்தார்.
5. தலீபான்கள் இந்த முறை நல்ல மனநிலையுடன் வந்துள்ளனர்- சாகித் அப்ரிடி நற்சான்று
ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த தலீபான்கள் பல்வேறு உறுதி மொழிகளை அளித்தனர்.’