கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று + "||" + England vs Pakistan: Seven Members Of England Men's ODI Contingent Test Positive For COVID-19

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் 3 பேர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் 4 பேர் என மொத்தம் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 8 ஆம் தேதி தொடங்க உள்ளது.  

போட்டி துவங்க உள்ள நிலையில், இங்கிலாந்து அணியினருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய  பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் அணி நிர்வாக உறுப்பினர்கள் 4 பேர் என மொத்தம் 7 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இதையடுத்து, வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டித்தொடர் திட்டமிட்ட படி நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில், போட்டித்தொடர் திட்டமிட்டபடி நிச்சயம் நடைபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய பாதுகாப்பு கூட்டாண்மை அறிவிப்பு!
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய பாதுகாப்பு கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
2. 18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சென்றது நியூசிலாந்து அணி
வங்காளதேச தொடரை முடித்தக் கொண்டு டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி நேற்று பாகிஸ்தானுக்கு சென்றது.
3. கொரோனா பாதிப்பு எதிரொலி: இந்தியாவுடனான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து- இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்தியாவுடனான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
4. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் திடீர் ராஜினாமா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மிஸ்பா உல் ஹக் விலகியுள்ளார்.
5. பாகிஸ்தான் கிரிக்கெட் : பயிற்சியாளர்கள் பதவியில் இருந்து மிஸ்பா உல் ஹக், வக்கார் யூனிஸ் திடீர் விலகல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் பதவியில் இருந்து மிஸ்பா உல் ஹக், வக்கார் யூனிஸ் திடீரென விலகியுள்ளனர்.