கிரிக்கெட்

பெண்கள் கிரிக்கெட் தரவரிசை: மிதாலிராஜ் மீண்டும் ‘நம்பர் ஒன்’ + "||" + Women's cricket rankings: Mithaliraj returns 'number one'

பெண்கள் கிரிக்கெட் தரவரிசை: மிதாலிராஜ் மீண்டும் ‘நம்பர் ஒன்’

பெண்கள் கிரிக்கெட் தரவரிசை: மிதாலிராஜ் மீண்டும் ‘நம்பர் ஒன்’
பெண்கள் கிரிக்கெட் தரவரிசை: மிதாலிராஜ் மீண்டும் ‘நம்பர் ஒன்’.
துபாய்,

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் மீண்டும் முதலிடத்தை (762 புள்ளி) பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு முன்பாக 8-வது இடத்தில் இருந்த மிதாலிராஜ் இந்த தொடரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் (72, 59, 75 ரன்) விளாசியதன் மூலம் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார். 2005-ம் ஆண்டு முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்த மிதாலிராஜ் கடைசியாக 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் உச்சத்தில் இருந்தார். தற்போது 8-வது முறையாக முதலிடத்தை அலங்கரிக்கிறார். தென்ஆப்பிரிக்காவின் லிசல் லீ 758 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜாண் டி ரோட்ஸ் - கிறிஸ் கெயிலுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை கூறிய பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி கிரிக்கெட் வீரர்கள் ஜாண் டி ரோட்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோருக்கு குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
2. ஒமைக்ரான் எதிரொலி: ஆஸ்திரேலியா- நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் தள்ளிவைப்பு
10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியுள்ளதால், தள்ளிவைக்கப்படுகிறது.
3. ஆற்றில் மூழ்கி மாணவி உள்பட 3 பெண்கள் பலி
குளித்துவிட்டு கரையேறியபோது ஆற்றில் மூழ்கி மாணவி உள்பட 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
4. இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது.
5. ‘என் மீதான விமர்சனம் குறித்து கவலையில்லை’ - விராட் கோலி
எனது ஆட்டம் பற்றி வரும் விமர்சனம் குறித்து நான் கவலைப்படுவதில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார்.