கிரிக்கெட்

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட்; இன்று நடக்கிறது + "||" + 20 overs cricket between India and England women's teams; Happening today

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட்; இன்று நடக்கிறது

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட்; இன்று நடக்கிறது
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் நார்த்தம்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் எதிர்பார்த்தபடி சோபிக்காததால் தான் ஒரு நாள் போட்டியில் தோல்வியை தழுவ நேர்ந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு குறுகிய வடிவிலான (ஒருநாள், 20 ஓவர்) போட்டியில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா ஆகியோர் நல்ல பார்மில் இருந்தாலும், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார்கள். இதனை சரிசெய்ய வேண்டியது அவசியமானதாகும்.

ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ‘காயம் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக என்னால் அதிக நேரம் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது. எனது மோசமான பார்முக்கு அது தான் உண்மையான காரணம் என்றாலும், அதனை ஒரு சாக்குபோக்காக சொல்ல முடியாது. ஒரு நல்ல இன்னிங்ஸ் அமைந்தால் எல்லாம் சரியாகி விடும். 20 ஓவர் போட்டி தொடரில் நாங்கள் வித்தியாசமான அணுகுமுறையை கையாள்வோம்’ என்றார்.

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறந்து விளங்கி வருகிறது. உள்ளூர் சூழல் அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். இந்திய அணி தனது பேட்டிங்கில் எழுச்சி பெற்றால் தான் இங்கிலாந்து அணிக்கு சவால் அளிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் இங்கிலாந்தும், 4-ல் இ்ந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி நள்ளிரவு 11 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.