கிரிக்கெட்

இந்தியா- இலங்கை இடையேயான கிரிக்கெட் போட்டித்தொடர் ஒத்திவைக்கப்படுகிறதா? + "||" + India's Limited Overs Series vs Sri Lanka Likely To Be Postponed: Sources

இந்தியா- இலங்கை இடையேயான கிரிக்கெட் போட்டித்தொடர் ஒத்திவைக்கப்படுகிறதா?

இந்தியா- இலங்கை இடையேயான கிரிக்கெட் போட்டித்தொடர் ஒத்திவைக்கப்படுகிறதா?
இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
கொழும்பு,

இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர் வருகிற 13-ந் தேதிகொழும்பில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்றுள்ளது. அதேபோல், இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு இலங்கை அணியும் தாயகம் திரும்பியுள்ளது. 

இங்கிலாந்தில் இருந்து இலங்கை திரும்பிய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இலங்கை அணியின்  பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு (ஜிம்பாப்வே) கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.  இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். அதேபோல், இலங்கை அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்குதொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான  ஒருநாள் கிரிக்கெட் தொடர் தள்ளிவைக்கப்பட்டு புதிய அட்டவணைப்படி நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 17- ஆம் தேதி முதல்  போட்டித்தொடங்கலாம் என  பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 

இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டில் 5 மணி வரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது
நாடு முழுவதும் மாலை 5 மணி வரை 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
2. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது தென்ஆப்பிரிக்கா
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 18.1 ஓவர்களில் 103 ரன்னில் சுருண்டது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,591 பேருக்கு கொரோனா
இந்தியாவில் தற்போது 3 லட்சத்து 84 ஆயிரத்து 921 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,973 பேருக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது
5. இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.