2-வது 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி


2-வது 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
x
தினத்தந்தி 11 July 2021 11:54 PM GMT (Updated: 11 July 2021 11:54 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

செயின்ட் லூசியா, 

செயின்ட் லூசியாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா 19.2 ஓவர்களில் 140 ரன்னில் சுருண்டு மறுபடியும் பணிந்தது. 61 ரன்கள் (36) விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Next Story