முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா மரணம் -ஜனாதிபதி இரங்கல்


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா மரணம் -ஜனாதிபதி இரங்கல்
x
தினத்தந்தி 13 July 2021 7:56 AM GMT (Updated: 13 July 2021 7:56 AM GMT)

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா மாரடைப்பால் உயிரிழந்தார்

புதுடெல்லி

முன்னாள்  இந்தியா கிரிக்கெட் வீரர யஷ்பால் சர்மா நொய்டாவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 66.
1983 உலகக் கோப்பை வென்ற அணியில் அவர் விளையாடி உள்ளார்.  

யஷ்பால் சர்மா இந்திய கிரிக்கெட் அணிக்காக 37 ஒருநாள் போட்டிகள் மற்றும் 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார் . 1979 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தவர் யஷ்பால் சர்மா. அதிரடி விளையாட்டுக்கு புகழ்பெற்ற யஷ்பால் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் 1,606 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 883 ரன்களையும் சேர்த்திருக்கிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்ற பின்பு இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளராக இரு முறை பணியாற்றி உள்ளார்.

யஷ்பால் சர்மா மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


Next Story