ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து


ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து
x
தினத்தந்தி 14 July 2021 6:16 PM GMT (Updated: 14 July 2021 6:16 PM GMT)

ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை அயர்லாந்து வீழ்த்தியது.

டப்ளின்,

அயர்லாந்துக்கு சென்றுள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஒரு நாள் போட்டி டப்ளின் நகரில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 5 விக்கெட்டுக்கு 290 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஆன்டி பால்பிர்னி சதமும் (102 ரன், 10 பவுண்டரி, 2 சிக்சர்), ஹாரி டெக்டர் அரைசதமும் (79 ரன், 6 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்தனர். 

பின்னர் 291 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணியில் ஜானிமன் மலான் (84 ரன்), வான்டெர் துஸ்சென் (49 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். முடிவில் அந்த அணி 48.3 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் அயர்லாந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை அயர்லாந்து வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 5 முறை அந்த அணியிடம் தோற்று இருந்தது. கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Next Story