கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ் அணி வீரர்கள் முரளி விஜய், அனிருதா விலகல் + "||" + DNPL Cricket: Trichy Warriors players Murali Vijay and Anirudha resign

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ் அணி வீரர்கள் முரளி விஜய், அனிருதா விலகல்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ் அணி வீரர்கள் முரளி விஜய், அனிருதா விலகல்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணி வீரர்கள் முரளி விஜய், அனிருதா ஆகியோர் சொந்த காரணங்களுக்காக இந்த போட்டி தொடரில் இருந்து விலகி இருக்கின்றனர்.
சென்னை,

8 அணிகள் பங்கேற்கும் 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 19-ந் தேதி முதல் ஆகஸ்டு 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்காக எல்லா அணியினரும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த போட்டிக்கான திருச்சி வாரியர்ஸ் அணி வீரர்கள் முரளி விஜய், அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக இந்த போட்டி தொடரில் இருந்து விலகி இருக்கின்றனர். இருவரும் கடந்த சீசனில் அந்த அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர்கள் ஆவர். 

அவர்களுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் வருண் தோத்தாத்ரி, இளம் பேட்ஸ்மேன் கேசவ் கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ராம் அர்விந்த் பயிற்சியின் போது கைவிரலில் காயம் ஏற்பட்டதால் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.