கிரிக்கெட்

பெண்கள் கிரிக்கெட் போட்டி; இந்தியாவிற்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து + "||" + Womens cricket tournament England won the T20 series against India

பெண்கள் கிரிக்கெட் போட்டி; இந்தியாவிற்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

பெண்கள் கிரிக்கெட் போட்டி; இந்தியாவிற்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3-வது டி-20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
செம்ஸ்ஃபோர்டு,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடியது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

அதனை தொடர்ந்து நடைபெற்ற டி-20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2-வது போட்டியில் இந்திய அணியும் பெற்றன. இந்த நிலையில் வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டம் இங்கிலாந்தின் செம்ஸ்ஃபோர்டு மைதானத்தில் நடந்தது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலாவதாக பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷெஃபாலி வர்மா களமிறங்கினர்.

முதல் ஓவரிலேயே ஷெஃபாலி வர்மா பவுல்ட் ஆகி ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 6 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 26 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்த நிலையில், எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களை விளாசி 51 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். இதையடுத்து இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 154 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டாமி பியுமாண்ட் 11 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அடுத்த விக்கெட்டுக்கு நடாலி சிவர்-டானியல் வயாட் ஜோடி சேர்ந்தனர். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் அணியின் ரன் ரேட் கணிசமாக உயர்ந்தது.

இதில் டானியல் வயாட் 12 பவுண்டரிகளையும், ஒரு சிக்சரையும் விளாசி 56 பந்துகளில் 89 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.நா. கவுன்சில் கூட்டம்: காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது.
2. ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி லீக் போட்டியில் ஜப்பானை சந்திக்கிறது
ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜப்பானை சந்திக்கிறது.
3. இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரிகள் இன்று பேச்சுவார்த்தை
இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே 2+2 பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.
4. “இந்தியா போட்டியை இழந்தது” என வெளியிட்ட அறிக்கையை மாற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கொரோனா அச்சுறுத்தால் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
5. டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள்: 19 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை!
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.