ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேச அணி எளிதில் வெற்றி


ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேச அணி எளிதில் வெற்றி
x
தினத்தந்தி 16 July 2021 9:58 PM GMT (Updated: 16 July 2021 9:58 PM GMT)

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி எளிதில் வெற்றி பெற்றது.

ஹராரே,

வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த ஜிம்பாப்வே அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 276 ரன்கள் சேர்த்தது. 4-வது சதம் அடித்த லிட்டான் தாஸ் 102 ரன்கள் (114 பந்து, 8 பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழந்தார். ஜிம்பாப்வே தரப்பில் லுக் ஜோங்வி 3 விக்கெட்டும், பிளஸ்சிங் முஜராபானி, ரிச்சர்ட் நரவா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி, வங்காளதேச வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 28.5 ஓவர்களில் 121 ரன்னில் சுருண்டது. இதனால் வங்காளதேச அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேச அணி தரப்பில் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வங்காளதேச வீரர் என்ற பெருமையை ஷகிப் அல்-ஹசன் (213 ஆட்டங்களில் 274 விக்கெட்) பெற்றார். இதற்கு முன்பு மோர்தசா (218 ஆட்டங்களில் 269 விக்கெட்) இந்த வகையில் முதலிடத்தில் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Next Story