கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் + "||" + Over 20 World Cup Cricket: India, Pakistan in the same division

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் முதல்முறையாக சந்திக்க இருக்கின்றன.
துபாய்,

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் வருகிற அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் எந்தெந்த பிரிவில் இடம் பெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி தரவரிசை அடிப்படையில் அணிகளுக்கான பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி நேரடியாக 2-வது சுற்றில் (சூப்பர் 12) களம் காணும் 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் குரூப்1-ல் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும், குரூப்2-ல் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு முதல்முறையாக சந்திக்க இருக்கின்றன. இரு அணிகளும் லீக் சுற்றிலேயே பலப்பரீட்சை நடத்த உள்ளன.

தொடக்க சுற்று லீக் ஆட்டத்தில் கலந்து கொள்ளும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா ‘ஏ’ பிரிவிலும், வங்காளதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ‘பி’ பிரிவிலும் அங்கம் வகிக்கின்றன. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும், ‘பி’ பிரிவில் 2-வது இடம் பெறும் அணியும் குரூப்1-க்கும், ‘பி’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும், ‘ஏ’ பிரிவில் 2-வது இடம் பெறும் அணியும் குரூப்2-க்கும் முன்னேறும். இந்த போட்டிக்கான அட்டவணை பிறகு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு
16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை நடக்கிறது.
2. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் மோதல்; பாகிஸ்தானை விட இந்திய அணியே வலுவானது - கம்பீர்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை விட இந்திய அணியே வலுவானது என்று இந்திய முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.
3. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்க 28-ந் தேதி வரை அவகாசம் - ஐ.சி.சி. வழங்கியது
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஐ.சி.சி. 28-ந்தேதி வரை கெடு விதித்துள்ளது.