கிரிக்கெட்

அயர்லாந்தை வீழ்த்தி ஒருநாள் கிரிக்கெட் தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா + "||" + Malan, De Kock star in series-levelling win

அயர்லாந்தை வீழ்த்தி ஒருநாள் கிரிக்கெட் தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா

அயர்லாந்தை வீழ்த்தி ஒருநாள் கிரிக்கெட் தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா
அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டப்ளின்

தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 

இந்நிலையில் அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 346 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 347 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. 47.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த அயர்லாந்து அணி 276 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம், 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை சமன் செய்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. மைதானத்துக்குள் புகுந்த நாய் பந்தை கவ்விக் கொண்டு ஓடியதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தம்
அயர்லாந்தில் மைதானத்துக்குள் புகுந்த நாய் பந்தை கவ்விக் கொண்டு ஓடியதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
2. 18 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்றது இலங்கை கிரிக்கெட் அணி
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை வென்றுள்ளது.
3. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
அயர்லாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. தென் ஆப்பிரிக்கா வன்முறை போராட்டம்- பலி எண்ணிக்கை 212- ஆக அதிகரிப்பு
வன்முறை போராட்டங்களால் தென் ஆப்பிரிக்காவில் பலியானவர்கள் எண்ணிக்கை 212- ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.