கிரிக்கெட்

டி.என்.பி.எல்.கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் இன்று மோதல் + "||" + DNPL Cricket: Sepang Super Gillies-Tirupur Tamils clash today

டி.என்.பி.எல்.கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் இன்று மோதல்

டி.என்.பி.எல்.கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் இன்று மோதல்
டி.என்.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் இன்று மோதுகிறது.
சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வரும் 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் என்.ஜெகதீசன், சோனு யாதவ், அலெக்சாண்டர், எம்.சித்தார்த் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இலங்கை தொடருக்கான இந்திய அணியுடன் வலைப்பயிற்சி பவுலராக சென்று இருக்கும் சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகியோர் அந்த தொடர் முடிந்ததும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இணைகிறார்கள். எம்.முகமது தலைமையில் பெயர் மாற்றத்துடன் களம் காணும் திருப்பூர் தமிழன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிக்கு வர்ணனையாளராக பணியாற்றுவதால் இந்த தொடரில் இருந்து விலகி விட்டார். வலுவான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சவாலை சமாளிப்பது திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.