கிரிக்கெட்

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி + "||" + Shamsi four-fer helps South Africa thump Ireland

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20:  தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
அயர்லாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டப்ளின்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இதில் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது. 

டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 165- ரன்கள் குவித்தது. 166- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு  132- ரன்கள் மட்டுமே  எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 33 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2- வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 22 ஆம் தேதி நடக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. 'கால்களை மூடுங்கள், புத்தகத்தை விரியுங்கள்' மாணவிகளிடையே தென் ஆப்பிரிக்க மந்திரி சர்ச்சை பேச்சு
'கால்களை மூடுங்கள், புத்தகத்தை விரியுங்கள்' மாணவிகளிடையே தென் ஆப்பிரிக்க பெண் மந்திரி சர்ச்சை பேச்சு
2. கேப்டவுன் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்
13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
3. தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு உத்தரவு திடீர் ரத்து..!
ஒமைக்ரான் வைரஸ் உச்சம் தொட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்க உத்தரவு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
4. தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த 3 பேருக்கு கொரோனா- ஒமைக்ரான் பாதிப்பா?
கடலூர் : தென் ஆப்ரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
5. தென்னாப்பிரிக்கா - இந்தியா கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.