கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் ஆட்டம் மழையால் நிறுத்தம் + "||" + DNPL Cricket match In 16.2 overs due to rain Game stop

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் ஆட்டம் மழையால் நிறுத்தம்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் ஆட்டம் மழையால் நிறுத்தம்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இன்றைய 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

ஆர். சதீஷின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திருப்பூர் தமிழன்ஸ் அணி 8.2 ஓவரில் 36 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

8-வது விக்கெட்டுக்கு எம். முகமது உடன் அஸ்வின் கிறிஸ்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி திருப்பூர் அணியை சரிவில் இருந்து மீட்டது. திருப்பூர் அணி 16.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

எம். முகமது 10 ரன்களுடனும், அஸ்வின் கிறிஸ் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி சார்பில்  ஆர். சதீஷ் 5 விக்கெட்டும், தேவ் ராகுல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி திணறல்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி திணறி வருகிறது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட் சென்னையில் இன்று தொடக்கம் கோவை-சேலம் அணிகள் மோதல்
சென்னையில் இன்று தொடங்கும் டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் கோவை-சேலம் அணிகள் மோதுகின்றன.
3. டி.என்.பி.எல். கிரிக்கெட் 19-ந்தேதி சென்னையில் தொடக்கம்
8 அணிகள் பங்கேற்கும் 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை முதலில் நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டது.