கிரிக்கெட்

டி.என்.பி.எல்.கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் இடையேயான போட்டி மழையால் ரத்து + "||" + #CSGvITT has been abandoned due to rain and the points are shared.

டி.என்.பி.எல்.கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் இடையேயான போட்டி மழையால் ரத்து

டி.என்.பி.எல்.கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் இடையேயான போட்டி மழையால் ரத்து
டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.
சென்னை, 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வரும் 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும்  திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்  அணி கேப்டன் கவுசிக் காந்தி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இதன்படி பேட்டிங்கை துவக்கிய திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 16.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் திருப்பூர் தமிழன்ஸ் அணி எடுத்து இருந்த போது, மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் நிறுத்தப்பட்டு பின்னர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.