பாகிஸ்தானுக்கு எதிரான டி20: இங். அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான டி20: இங். அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
x
தினத்தந்தி 20 July 2021 11:33 PM GMT (Updated: 2021-07-21T05:03:09+05:30)

பாகிஸ்தானுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.

மான்செஸ்டர், 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலை பெற்றது. தொடரை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டி 20 போட்டி மான்செஸ்டர் நகரில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி,  19.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது. 

Next Story