வைரலாக பரலாக பரவி வரும் விராட் கோலியின் பேட்டிங் பயிற்சி! வீடியோ


வைரலாக பரலாக பரவி வரும் விராட் கோலியின் பேட்டிங் பயிற்சி! வீடியோ
x
தினத்தந்தி 21 July 2021 3:26 PM GMT (Updated: 2021-07-21T20:56:13+05:30)

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பயிற்சியில் மேற்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.

லண்டன்,

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்டு 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. தற்போது இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களுக்கு 3 வாரங்கள் ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே காயம் காரணமாக ஆட்டத்தில் விளையாடவில்லை. இதனால், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.

இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தின் 2-வது நாள் உணவு இடைவேளையில் இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அதன் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரலாக பரவி வருகிறது.

Next Story