கிரிக்கெட்

கொரோனா பாதிப்பு: ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு + "||" + West Indies-Australia second ODI suspended after a staff member tests COVID positive

கொரோனா பாதிப்பு: ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு

கொரோனா பாதிப்பு: ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு
டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பார்படாஸ், 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் முதலில் நடைபெற்றது. இதில் 4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. 

முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், 2- வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது. போட்டி தொடங்குவதற்காக டாஸ் போடப்பட்டது. ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில்,  வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, உடனடியாக போட்டி தொடங்குவது நிறுத்தப்பட்டது.  வீரர்கள் அனைவரும் ஓட்டல் அறைக்க்கு திரும்ப அனுப்பப்பட்டனர். அனைத்து வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதன் முடிவுகளின் அடிப்படையில் 2-வது ஒருநாள் போட்டி எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இனப்பெருக்கத்திற்காக லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் ஊர்வலம்
ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் சாலைகளை கடந்து கடற்கரையை நோக்கி பயணித்தன.
2. ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போட்ட வெளிநாட்டினருக்கு டிசம்பர் 1-ந்தேதி முதல் அனுமதி...!
டிசம்பர் 1-ந்தேதி முதல் தடுப்பூசி போட்ட வெளிநாட்டினருக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி அளிக்கப்பட உள்ளது.
3. இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இலங்கை 386 ரன்கள் எடுத்தது
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 386 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
4. ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டன் யார்? கில்கிறிஸ்ட் ஆதரவு யாருக்கு...?
பேட் கம்மின்ஸ் தான் ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டனாக வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
5. மகளிர் 20 ஓவர் பிக்பாஷ் கிரிக்கெட்: இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா சதம்
57 பந்துகளில் சதமடித்த ஸ்மிரிதி மந்தனா மகளிர் பிக்பாஷ் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்