கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இலங்கை அணிக்கு 227 ரன்கள் வெற்றி இலக்கு + "||" + INDvsSL India 225 all out in 43.1 overs vs Sri Lanka in the third ODI in Colombo

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இலங்கை அணிக்கு 227 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இலங்கை அணிக்கு 227 ரன்கள் வெற்றி இலக்கு
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு 227 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொழுப்பு,

இலங்கைக்கு சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து மழை குறிக்கீட்டின் காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதையடுத்து இரு அணிகளுக்கு 47 ஓவர்கள் மட்டும் நிர்ணயித்து மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது.

இதன்படி,  நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் இந்திய அணி 43.1 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து இலங்கை அணிக்கு மழை குறிக்கீட்டு காரணமாக 227 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சனும் 46 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் தன்ஞ்சயா, பிரவீன் ஜெயவிக்ரமா 3 விக்கெட்களும், துஷ்மந்தா சமீரா 2 விக்கெட்டும், சனகா, கருணாரத்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
2. நாட்டில் இதுவரை 80 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 80 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. நாட்டில் 5 மணி வரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது
நாடு முழுவதும் மாலை 5 மணி வரை 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,591 பேருக்கு கொரோனா
இந்தியாவில் தற்போது 3 லட்சத்து 84 ஆயிரத்து 921 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,973 பேருக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது