கிரிக்கெட்

3வது ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி + "||" + 3rd ODI: Sri Lanka won by 3 wickets

3வது ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

3வது ஒரு நாள் கிரிக்கெட்:  இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


கொழும்பு,

இலங்கைக்கு சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை மோதும் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.  மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.  இதன்பின், இரு அணிகளுக்கும் 47 ஓவர்கள் மட்டும் நிர்ணயித்து மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது.

இதன்படி,  நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் இந்திய அணி 43.1 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து இலங்கை அணிக்கு மழை குறுக்கீடு காரணமாக 227 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் தன்ஞ்சயா, பிரவீன் ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்களும், துஷ்மந்தா சமீரா 2 விக்கெட்களும், சனகா, கருணாரத்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இலங்கை அணி விளையாடியது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான அவிஷ்கா அதிரடியாக விளையாடி 76 ரன்கள் (98 பந்துகள், 4 பவுண்டரி, 1 சிக்சர்) குவித்து ஸ்கோரை உயர்த்தினார்.  மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மினோத் பனூகா 7 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து விளையாடிய பனூகா ராஜபக்ஷா 65 ரன்கள் (56 பந்துகள், 12 பவுண்டரி) எடுத்து அணியை வலுப்படுத்தினார்.  தனஞ்ஜெயா (2), சரித் அசலாங்கா (24), தசுன் சனகா (0), சமிகா (3) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

எனினும், இலங்கை அணி 39 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.  ரமேஷ் மென்டிஸ் 15 ரன்களுடனும், அகிலா தனஞ்ஜெயா 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்திய அணி சார்பில் ராகுல் சஹார் 3 விக்கெட்டுகள், சகாரியா 2 விக்கெட்டுகள், கிருஷ்ணப்பா கவுதம், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி: கர்நாடக மக்களுக்கு ஜே.பி.நட்டா நன்றி
கர்நாடகத்தில் 3 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது.
2. இந்திய அணி அபார வெற்றி: தொடரில் முன்னிலை பெற்றது
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.
3. ஷமி, பும்ராவின் பேட்டிங்கால் எழுச்சி: இங்கிலாந்தை பந்தாடியது, லண்டன் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
4. டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி ‘திரில்’ வெற்றி
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி ‘திரில்’ வெற்றி.
5. இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.