கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை அணியிடம் திருச்சி தோல்வி + "||" + TNPL 2021: Ruby Trichy Warriors win toss, elect to bat against Lyca Kovai Kings

டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை அணியிடம் திருச்சி தோல்வி

டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை அணியிடம் திருச்சி தோல்வி
சென்னையில் நடந்து வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நிதிஷ் ராஜகோபால் 45 ரன்னும், அமித் சாத்விக் 42 ரன்னும் எடுத்தனர். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய கோவை அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜூ 74 ரன்னும் (52 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), கவின் 11 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். சாய் சுதர்சன் 57 ரன்னுடனும் (43 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் ஷாருக்கான் 18 ரன்னுடனும் (5 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேலம் அணியை பந்தாடியது திண்டுக்கல்
5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. நேற்றிரவு நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சேலம் ஸ்பார்டன்சை சந்தித்தது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சியை சாய்த்தது திண்டுக்கல்
8 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் சந்தித்தன. முதலில் பேட் செய்த திருச்சி வாரியர்ஸ் 5 விக்கெட்டுக்கு 145 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது.
3. டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி அணி 2-வது வெற்றி
5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. நேற்று மாலை நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி, திருச்சி வாரியர்சை எதிர்கொண்டது.