கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் இன்று மோதல் + "||" + TNPL Cricket 2021: Chepauk Super Gillies- Royal Kings clash today

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் இன்று மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் இன்று மோதல்
5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இதில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஒரு ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, பாபா அபராஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சை எதிர்கொள்கிறது. கில்லீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 64 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி கட்டுப்படுத்திய நிலையில் மழை குறுக்கிட்டதால் அந்த ஆட்டம் பாதியில் ரத்தானது. இதையடுத்து வெற்றிக்கணக்கை தொடங்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அதே சமயம் தனது தொடக்க லீக்கில் திருச்சி வாரியர்சிடம் 74 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி சரிவில் இருந்து மீளும் முனைப்புடன் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
கோவை அணிக்கு எதிரான இன்றைய டி.என்.பி.எல். ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றிபெற்றது.
3. டி.என்.பி.எல். கிரிக்கெட் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு 154 ரன்கள் இலக்கு
திருச்சி அணிக்கு எதிரான டி.என்.பி.எல். முதலாவது தகுதிச்சுற்றில் முதலில் பேட்டிங் செய்த சேபாக் சூப்பர் கில்லீஸ் அணி 153 ரன்கள் எடுத்துள்ளது.
4. டி.என்.பி.எல். கிரிக்கெட் முதலாவது தகுதிச்சுற்று - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் பேட்டிங்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான டி.என்.பி.எல். முதலாவது தகுதிச்சுற்றில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
5. டி.என்.பி.எல். : சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி திருச்சி அணிக்கு 133-ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் சேர்த்தது.அந்த அணியில் ராதாகிருஷ்ணன் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்து உள்ளார்.