கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் சேர்ப்பு + "||" + Prithvi Shaw, Suryakumar Yadav To Join India's Test Team In England, Shubman Gill, Washington Sundar And Avesh Khan Out

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் சேர்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் சேர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது.
லண்டன், 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது. 

இதில் பங்கேற்கும் இந்திய அணி ஏற்கனவே, இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியில் இடம் பிடித்த வாஷிங்டன் சுந்தர் மற்றும்  சுப்மான் கில், அவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளனர். இவர்களுக்கு பதிலாக இந்திய அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ்  ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 


இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்: 

ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்) ரகானே (துணை கேப்டன்) ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்) அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, இஷாந்த் சர்மா, முகம்மது சமி, முகம்மது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், கே எல் ராகுல், ரிதிமான் சஹா, அபிமன்யு ஈஸ்வரன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ்

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் உயரும் கொரோனா: மத்திய சுகாதாரத்துறை தகவல்
தமிழகம், மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
2. இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள்: 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
3. முதலாவது ஒருநாள் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்..!
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பார்ல் நகரில் இன்று நடக்கிறது.
4. இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: தென் ஆப்ரிக்காவின் முக்கிய வீரர் வெளியேற்றம்..!
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது.
5. இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது.