கிரிக்கெட்

2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இலங்கை இன்று மோதல் + "||" + India-Sri Lanka clash in the 2nd T20 cricket match today

2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்

2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்
இந்தியா-இலங்கை இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
20 ஓவர் கிரிக்கெட்
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்றிரவு (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.தொடக்க ஆட்டத்தில் 164 ரன்கள் சேர்த்த இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் (50 ரன்), கேப்டன் ஷிகர் தவான் (46 ரன்) ஆகியோரின் பேட்டிங் நேர்த்தியாக இருந்தது. இதே போல் பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட் வீழ்த்தி கலக்கினார். ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டிங் இந்த தொடரில் பெரிய அளவில் இல்லை. அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும்.

சூர்யகுமார் யாதவ்
தொடக்க வீரர் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால் அவர்கள் விரைவில் இங்கிலாந்துக்கு கிளம்ப இருக்கிறார்கள். எனவே இன்றைய ஆட்டத்தில் விளையாடி விட்டு கடைசி ஆட்டத்தில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சை பொறுத்தவரை 20 ஓவர் உலக கோப்பை அணிக்கான இடத்துக்கு குறி வைத்துள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் தங்களது முழு திறமையை வெளிப்படுத்துவதில் தீவிரம் 
காட்டுவார்கள்.

தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியில் அனுபவ வீரர்கள் குறைவு. தொடக்க ஆட்டத்தில் கடைசி 15 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 126 ரன்னில் சுருண்டது. சாரித் அசலங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ தவிர அந்த அணியில் மற்றவர்களின் பேட்டிங் எடுபடவில்லை. ஏற்கனவே ஒரு நாள் தொடரை பறிகொடுத்துவிட்ட இலங்கை அணி 20 ஓவர் தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். டாப்-3 பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் நிலைத்து ஆடினால் இந்தியாவுக்கு சவால் அளிக்கலாம். 
இல்லாவிட்டால் திண்டாட்டம் தான்.

இரவு 8 மணிக்கு..

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: பிரித்வி ஷா, தவான் (கேப்டன்), சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், குருணல் பாண்ட்யா, தீபக் சாஹர், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி.

இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா, தனஞ்ஜெயா டி சில்வா, அசலங்கா அல்லது சமரவிக்ரமா, அஷென் பண்டாரா, ஷனகா, (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, உதனா, சமீரா, அகிலா தனஞ்ஜெயா.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.