இந்தியாவுடனான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
கொழும்பு,
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி தற்போது முதலாவதாக பேட்டிங் செய்கிறது. ஏற்கனவே ஒரு நாள் தொடரை பறிகொடுத்துவிட்ட இலங்கை அணி, 20 ஓவர் தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இன்றைய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்;-