கிரிக்கெட்

2-வது டி-20 கிரிக்கெட் - இலங்கை அணிக்கு 133 ரன்கள் இலக்கு + "||" + 2nd T20 Cricket Target 133 runs for Sri Lanka

2-வது டி-20 கிரிக்கெட் - இலங்கை அணிக்கு 133 ரன்கள் இலக்கு

2-வது டி-20 கிரிக்கெட் - இலங்கை அணிக்கு 133 ரன்கள் இலக்கு
இலங்கைக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 132 ரன்கள் எடுத்துள்ளது.
கொழும்பு,

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் ருதுராஜ் கெய்க்வாட் 21 ரன்களில் கேட்ச் ஆன நிலையில், அடுத்ததாக தேவ்தத் படிக்கல்லுடன் தவான் ஜோடி சேர்ந்தார்.

ஆனால் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை. 42 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்களில் தவான் அவுட் ஆனார். தேவ்தத் படிக்கல் 23 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம்சன் 7 ரன்களிலும், நிதிஷ் ராணா 9 ரன்களிலும் அவுட்டாகி நடையை கட்டினர். 

இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது. புவனேஸ்வர் குமார் (13) மற்றும் நவ்தீ சயினி (1) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 133 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி தற்போது விளையாடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் உணவுப்பஞ்சம் ஏற்படாது - இலங்கை அரசு திட்டவட்டம்
இலங்கையில் கடும் உணவுப்பஞ்சம் ஏற்படும் என்று சமீபத்தில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
2. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மருத்துவ ஆக்சிஜன் அனுப்பி வைப்பு
இலங்கைக்கு சுமார் 150 டன் மருத்துவ ஆக்சிஜனை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
3. மைதானத்திற்குள் அத்துமீறி நுழைவதை வாடிக்கையாக கொண்டிருந்த ஜார்வோ கைது
ஜார்வோ என்ற பெயரிலான ரசிகர் ஒருவர் இந்திய அணிக்குரிய சீருடையுடன் மைதானத்திற்குள் திடீரென நுழைந்து இடையூறு ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
4. நடுக்கடலில் தமிழக மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்கள் கொள்ளை இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள், கொள்ளையடித்து சென்றனர்.
5. இலங்கை தமிழர்களுக்கு இனிக்கும் செய்திகள்!
‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்று நீண்ட நெடுங்காலமாக புகழாரம் சூட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.