கொரோனா விதிகளை மீறியதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு ஓராண்டு தடை விதிப்பு


கொரோனா விதிகளை மீறியதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு ஓராண்டு தடை விதிப்பு
x
தினத்தந்தி 30 July 2021 5:01 PM GMT (Updated: 30 July 2021 5:01 PM GMT)

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இலங்கை வீரர்களுக்கு ஓரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, 

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது  உயிர் பாதுகாப்பு வளையத்தின் விதிமுறைகளை மீறியதற்காக இலங்கை வீரர்கள் 3 பேருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் போட்டியில் விளையாட  இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இலங்கை அணியின் துணை கேப்டன் குஷல் மெண்டிஸ், துவக்க ஆட்டக்காரர் தனுஷ்கா குணதிலகா, விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா ஆகிய மூன்று பேருக்கு எதிராகத்தான் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதோடு 50 ஆயிரம் டாலர் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய வீரர்கள் மூன்று பேரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, இரவு நேரத்தில் கொரோனா விதிகளை மீறி  வெளியில் சென்றனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையாகின.

 ஏனெனில், மறுநாள் போட்டி இருந்த நிலையில், வீரர்கள் மூன்றுபேரும் உயிர் பாதுகாப்பு வளையத்தை மீறி வெளியில் சென்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, 5 பேர் கொண்ட ஒழுங்கு முறை குழு விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் மூன்று வீரர்களும் விதிகளை மீறி டர்ஹாமில் உள்ள ஓட்டலில் இருந்து வெளியே சென்றது கண்டறியப்பட்டது.

Next Story