கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி + "||" + IDream Tiruppur Tamizhans won by 2 runs

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னை,

5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக தினேஷ் 39 ரன்கள் விளாசினார். கோவை அணி தரப்பில் அபிலேஷ், முகிலேஷ், திவாகர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. கங்கா ஸ்ரீதர் 30, வெங்கட்ரமணன் 24, சாய் சுதர்சன் 51 ரன்கள் எடுத்தனர். 

கடைசி கட்டத்தில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் திருப்பூர் அணியின் கேப்டன் முகமது சிறப்பாக பந்து வீசி 3 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதனால் அந்த அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜூன் 23-ல் தொடங்குகிறது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி- அட்டவணை வெளியீடு
தொடக்க ஆட்டத்தில் நெல்லை அணியுடன் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மோதுகிறது.