இலங்கை வீரர் உதனா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு


இலங்கை வீரர் உதனா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
x
தினத்தந்தி 1 Aug 2021 12:47 AM GMT (Updated: 2021-08-01T06:17:05+05:30)

வேகப்பந்து வீச்சாளர் இசுரு உதனா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் இசுரு உதனா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடுவதற்கு இதுவே சரியான நேரம் என்று நம்புவதாக கூறிய உதனா தொடர்ந்து உள்ளூர் மற்றும் 20 ஓவர் வடிவிலான லீக் போட்டிகளில் விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

33 வயதான உதனா இலங்கை அணிக்காக 21 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 18 விக்கெட்டும், 35 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். இது தவிர இவ்விரு வடிவிலான போட்டிகளில் தலா ஒரு அரைசதமும் அடித்துள்ளார்.

Next Story