டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் இடையிலான ஆட்டம் மழையால் ரத்து


டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் இடையிலான ஆட்டம் மழையால் ரத்து
x
தினத்தந்தி 1 Aug 2021 4:22 AM GMT (Updated: 2021-08-01T09:52:48+05:30)

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த  மதுரை பாந்தர்ஸ் அணி 19.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 

மதுரைக்கு எதிராக நெல்லை அணி வீரர் அதிசயராஜ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

Next Story