பிற விளையாட்டு

ஒலிம்பிக் பேட்மிண்டன்; வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து + "||" + Olympic Badminton PV Sindhu wins Bronze medal

ஒலிம்பிக் பேட்மிண்டன்; வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து

ஒலிம்பிக் பேட்மிண்டன்; வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்திற்கான பேட்மிண்டன் போட்டியில், சீன வீராங்கனையை பி.வி. சிந்து தோற்கடித்து வெற்றி பெற்றார்.
டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி சிந்து- தைவான் நாட்டைச் சேர்ந்த டாய் சூ யிங்கை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் பி.வி. சிந்து 21-18,  21-12 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். 

இதனையடுத்து இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் ஹி பிங்யாஜிவோவை பி.வி. சிந்து எதிர்கொண்டார். இந்த போட்டியில் பி.வி. சிந்து 21-13, 21-15 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார். 

இதன் மூலம் 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பி.வி. சிந்து பெற்றுள்ளார். இதற்கு முன் 2016 ரியோ ஒலிம்பிக்கில் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து, ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு முன்னேற்றம்..!
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பி.வி. சிந்து, ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியுடன் மோதினார்.