கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்; திண்டுக்கல் அணிக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் + "||" + TNPL Chepauk Super Gillies set 160 run target for Dindigul

டி.என்.பி.எல். கிரிக்கெட்; திண்டுக்கல் அணிக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

டி.என்.பி.எல். கிரிக்கெட்; திண்டுக்கல் அணிக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
இன்றைய டி.என்.பி.எல். 19-வது லீக் ஆட்டத்தில் முதலாவதாக பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 159 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை,

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதன் 19-வது லீக் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மோதுகிறது. 

இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் ஹரி நிஷாந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து தற்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவுசிக் காந்தி மற்றும் என்.ஜெகதீசன் களமிறங்கினர். 

தொடக்கத்தில் இருந்தே இருவரும் களத்தில் அதிரடி காட்டத் துவங்கினர். கவுசிக் காந்தி 5 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் பறக்கவிட்டு 31 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து பவுல்ட் ஆனார். மறுமுனையில் 27 பந்துகளை சந்தித்த ஜெகதீசன் 3 சிக்சர்களை விளாசி 40 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். 

அடுத்து வந்த சோனு யாதவ் 6 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, சற்று நிலைத்து நின்று ஆடிய சசிதேவ் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதன் பிறகு வந்தவர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் அணி தற்போது விளையாடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
கோவை அணிக்கு எதிரான இன்றைய டி.என்.பி.எல். ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றிபெற்றது.
3. டி.என்.பி.எல். கிரிக்கெட் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு 154 ரன்கள் இலக்கு
திருச்சி அணிக்கு எதிரான டி.என்.பி.எல். முதலாவது தகுதிச்சுற்றில் முதலில் பேட்டிங் செய்த சேபாக் சூப்பர் கில்லீஸ் அணி 153 ரன்கள் எடுத்துள்ளது.
4. டி.என்.பி.எல். கிரிக்கெட் முதலாவது தகுதிச்சுற்று - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் பேட்டிங்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான டி.என்.பி.எல். முதலாவது தகுதிச்சுற்றில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
5. டி.என்.பி.எல். : சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி திருச்சி அணிக்கு 133-ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் சேர்த்தது.அந்த அணியில் ராதாகிருஷ்ணன் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்து உள்ளார்.