ஆஸ்திரேலிய தேர்வு குழு தலைவராக ஜார்ஜ் பெய்லி நியமனம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Aug 2021 9:51 PM GMT (Updated: 1 Aug 2021 9:51 PM GMT)

ஆஸ்திரேலிய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

மெல்போர்ன், 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தேர்வு குழுவில் 21 ஆண்டுகள் அங்கம் வகித்த டிரோவர் ஹான்ஸ் 16 ஆண்டுகள் தலைவராக பதவி வகித்து ஓய்வு பெற்றுள்ளார். 

இதையடுத்து புதிய தேர்வு குழு தலைவராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு குழு உறுப்பினராக இணைந்த ஜார்ஜ் பெய்லி தலைவர் பதவியை பிடித்துள்ளார். 

38 வயதான ஜார்ஜ் பெய்லி 90 ஒரு நாள், முப்பது 20 ஓவர், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவர் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மொத்தம் 57 முறை அணிக்கு தலைமை தாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு குழு உறுப்பினராக தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நீடிக்கிறார். 3-வது தேர்வு குழு உறுப்பினர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story