கிரிக்கெட்

இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட்: 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி + "||" + Second 20 over cricket: Pakistan won by 7 runs

இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட்: 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட்: 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
கயானா, 

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கயானாவில் நேற்று முன்தினம் நடந்தது. 

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 51 ரன்களும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 46 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 150 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் நிகோலஸ் பூரன் 33 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 62 ரன்கள் விளாசியும் பலன் இல்லை. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஹபீஸ் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 6 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்றார். முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது தென்ஆப்பிரிக்கா
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 18.1 ஓவர்களில் 103 ரன்னில் சுருண்டது.
2. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி
நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் 93 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக வில் யங் 46 ரன்கள் எடுத்தார்.
3. 20 ஓவர் கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி
வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து 60 ரன்னில் சுருண்டு தோல்வியடைந்தது.
4. 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
5. இந்தியா- இலங்கை இடையேயான கிரிக்கெட் போட்டித்தொடர் ஒத்திவைக்கப்படுகிறதா?
இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.