கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்; இந்தியா முதலில் பந்து வீச்சு + "||" + England opt to bat in series opener

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்; இந்தியா முதலில் பந்து வீச்சு

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்;  இந்தியா முதலில் பந்து வீச்சு
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது.
நாட்டிங்ஹாம், 

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று (புதன்கிழமை)  தொடங்கியது. 

இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடந்த முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி கண்ட பிறகு இந்திய அணி ஆடும் முதலாவது டெஸ்ட் போட்டி என்பதாலும், 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான முதல் தொடர் என்பதாலும் இந்த போட்டியை இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது. 

ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இன்று இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசுகிறது. 

இரு அணிகளிலும் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு: -
இங்கிலாந்து,

ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லே, சக் கிராவ்லி, ஜோ ரூட் (கேப்டன்), ஜான்னி பெர்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், ஒலி ராபின்சன், ஸ்டுவர்ட் பிராடு, ஜேம்ஸ் ஆண்டர்சன்,

இந்தியா;

 ரோகித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்) ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சமி, முகம்மது சிராஜ்,


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 29,616 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,616 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
2. இந்தியாவுக்கு வருமாறு ஜோ பைடனுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி
ஜோ பைடனிடம் இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார் என இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
3. ஸ்பெயின் நிறுவனத்திடம் இருந்து 56 ராணுவ விமானங்களை இந்தியா வாங்குகிறது...
ஸ்பெயின் நிறுவனத்திடம் இருந்து 56 ராணுவ விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
5. நாட்டில் இதுவரை 80 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 80 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.