கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்; சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Chepauk Super Gillies won by 36 runs

டி.என்.பி.எல். கிரிக்கெட்; சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

டி.என்.பி.எல். கிரிக்கெட்; சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 24-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் கோவை கிங்ஸ் அணியும் மோதின.
சென்னை,

தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 24வது லீக் ஆட்டம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.  இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இதில், டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.  இதன்படி, சேப்பாக்  சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில்,  7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. 

இதையடுத்து 160- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றது. 

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இது 4-வது வெற்றியாக பதிவானது. 4 வெற்றி, ஒரு முடிவில்லை, ஒரு தோல்வி என்று 9 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்தது.

இன்றைய லீக் ஆட்டங்களில் திண்டுக்கல் டிராகன்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் (மாலை 3.30 மணி), சேலம் ஸ்பார்டன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான 2-வது தகுதிச் சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
2. டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் அணி வெற்றிபெற 104 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல்
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 2-வது தகுதிச் சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிபெற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
3. டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் இடையிலான ஆட்டம் மழையால் ரத்து
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின.
4. டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.