கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு + "||" + Root ton, Bumrah fifer set up tantalising final day

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்:  இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது.
நாட்டிங்காம், 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 183 ரன்களும், இந்தியா 278 ரன்களும் எடுத்தன. 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 85.5 ஓவர்களில் 303 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. சதம் விளாசி அணியை சரிவில் இருந்து காப்பாற்றிய கேப்டன் ஜோ ரூட் 109 ரன்களில் (172 பந்து, 14 பவுண்டரி) கேட்ச் ஆனார். அவர் அடித்த 21-வது சதம் இதுவாகும். இந்தியாவுக்கு எதிராக 6-வது சதமாகும். சாம் கர்ரன் 32 ரன்களும், பேர்ஸ்டோ 30 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

இதன் மூலம் இந்திய அணிக்கு 209 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. வெற்றிக்கு மேலும் 157 ரன்கள் தேவைப்படும் நிலையில் இந்திய வீரர்கள் பதற்றமின்றி நிலைத்து நின்று ஆடினால் வெற்றிக்கனியை பறிக்கலாம். இதனால் கடைசி நாள் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கிரிக்கெட் : 99 மற்றும் 199 ரன்களில் ஆட்டமிழந்து மேத்யூஸ் பரிதாபமான சாதனை..!!
மேத்யூஸ் 99 மற்றும் 199 ரன்களில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற பரிதாபமான சாதனையை படைத்துள்ளார்.
2. நான் உங்கள் துணை விமானி பேசுகிறேன்... இன்னும் பயிற்சியில் தேர்ச்சியடையவில்லை - நடுவானில் பீதியை கிளப்பிய விமானி...!
பயிற்சி முழுமையடையாத துணை விமானி 300-க்கும் மேற்பட்டோர் பயணித்த விமானத்தை இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி. ராஜினாமா
இங்கிலாந்தில் நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி. தனது பதவியை ராஜினாமா செய்தார்.
4. 2 நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை...!
2 நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.
5. இங்கிலாந்து பிரதமர் இன்று இந்தியா வருகிறார்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று (21-ந் தேதி) இந்தியா வருகிறார். புறப்படுவதற்கு முன், அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ‘இரு தரப்பு உறவுகள் வலுவடையும்’ என நம்பிக்கை தெரிவித்தார்.