டி.என்.பி.எல்:நெல்லை அணிக்கு 170-ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கோவை கிங்ஸ்


டி.என்.பி.எல்:நெல்லை அணிக்கு 170-ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கோவை கிங்ஸ்
x
தினத்தந்தி 8 Aug 2021 12:02 PM GMT (Updated: 2021-08-08T17:40:04+05:30)

லைகா கோவை கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது அந்த அணியில் ஷாருகான் அதிக பட்சம் 64 ரன்கள் எடுத்து உள்ளார்.

சென்னை

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓஅவ்ர் தொடரின் லீக் ஆட்ட போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அத்துடன் லீக் போட்டிகள் முடிவடைந்துவிடும்.

மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில்  கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதில் லைகா கோவை கிங்ஸ்  20 ஓவர்களில்  6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது அந்த  அணியில் ஷாருகான் அதிக பட்சம்  64 ரன்கள் எடுத்து உள்ளார்.இதனை அவர் 29 பந்துகளில் அடித்துள்ளார்.

நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் பாபா அபரஜித் 3 விக்கேட்டுகலை கைப்பற்றி உள்ளார்.  அடுத்து நெல்லை ராயல் கிங்ஸ்  அணி களம் இறங்கி உள்ளது. 

Next Story