கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி + "||" + TNPL Cricket Dindigul Dragons win by 5 wickets

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
கோவை அணிக்கு எதிரான இன்றைய டி.என்.பி.எல். ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை,

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி-20 தொடரில் இன்று வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நடைபெற்றது. லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி கோவை கிங்ஸ் அணியின் கங்கா ஸ்ரீதர் ராஜூ, சுரேஷ் குமார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவராலும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க இயலவில்லை. கங்கா ஸ்ரீதர் ராஜூ 17 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுரேஷ் குமார் 15 பந்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

3-வது வீரராக களம் இறங்கிய சாய் சுதர்சன் சிறப்பான விளையாடினார். ஆனால் அவருக்கு முகிலேஷ் (13 பந்தில் 17 ரன்), வெங்கடராமன் (7 பந்தில் 1 ரன்), ஷாருக் கான் (22 பந்தில் 28 ரன்) ஆகியோரால் சிறந்த முறையில் ஒத்துழைப்பு கொடுக்க முடியவில்லை. இதனால் கோவை கிங்ஸ் அணியின் ஸ்கோர் 150 ரன்னைத் தாண்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.

சாய் சுதர்சன் 19-வது ஓவரின் 4-வது பந்தை இரண்டு ரன்னிற்கு விரட்டி 36 பந்தில் அரைசதம் அடித்தார். 19-வது ஓவரில் கோவை கிங்ஸ் அணிக்கு இரண்டு சிக்சர்கள் கிடைக்க, 17 ரன்கள் அடித்தது. இதனால் ஸ்கோர் 138 ரன்களானது.

கடைசி ஓவரை குர்ஜப்நீத் சிங் வீசினார். முதல் நான்கு பந்தில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஐந்தாவது பந்தில் அபிஷேக் தன்வரை (7 பந்தில் 13 ரன்) வீழ்த்தினார். கடைசி பந்தில் சுதர்சன் பவுண்டரி அடிக்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்தது. 

சுதர்சன் 40 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் குர்ஜப்னீத் சிங் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார். பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ்வர் மற்றும் ஹரி நிஷாந்த் களமிறங்கினர். அஜித் ராம் வீசிய பந்தில் லோகேஷ்வர் 9 ரன்களில் பவுல்ட் ஆன நிலையில், அடுத்து வந்த மணி பாரதி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஹரி நிஷாந்த் நிலைத்து நின்று ஆடி அரைசத்தைக் கடந்தார்.

5 சிக்சர்களுடன் 44 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஹரி நிஷாந்த் கேட்ச் ஆகி வெளியேறினார். ராஜாமணி ஸ்ரீஇனிவாசன் 18 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய விவேக் 26 பந்துகளில் 52 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் அணியின் வெற்றி உறுதியானது. இறுதியாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றிபெற்றது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு 154 ரன்கள் இலக்கு
திருச்சி அணிக்கு எதிரான டி.என்.பி.எல். முதலாவது தகுதிச்சுற்றில் முதலில் பேட்டிங் செய்த சேபாக் சூப்பர் கில்லீஸ் அணி 153 ரன்கள் எடுத்துள்ளது.
3. டி.என்.பி.எல். கிரிக்கெட் முதலாவது தகுதிச்சுற்று - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் பேட்டிங்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான டி.என்.பி.எல். முதலாவது தகுதிச்சுற்றில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
4. டி.என்.பி.எல். : சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி திருச்சி அணிக்கு 133-ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் சேர்த்தது.அந்த அணியில் ராதாகிருஷ்ணன் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்து உள்ளார்.
5. டி.என்.பி.எல். கிரிக்கெட்: டாஸ்வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் தேர்வு
இரண்டாவது போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.