தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நிதிஉதவி - என்.சீனிவாசன் வழங்கினார்


தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நிதிஉதவி - என்.சீனிவாசன் வழங்கினார்
x
தினத்தந்தி 12 Aug 2021 4:28 AM GMT (Updated: 2021-08-12T09:58:07+05:30)

தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் நிதிஉதவி வழங்கினார்.

சென்னை, 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சார்பில் முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு நிதிஉதவி வழங்கும் விழா சென்னையில் நடந்தது. 

இதில் தமிழக அணிக்காக 1950-60-களில் விளையாடிய கே.ஆர்.ராஜகோபால், நஜம் ஹூசைன், எஸ்.வி.எஸ்.மணி, பிரபாகர் மற்றும் சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தின் (பிட்ச்) பராமரிப்பாளராக 1973-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை சிறந்த முறையில் செயல்பட்டு ஓய்வு பெற்ற கே. பார்த்தசாரதி ஆகியோருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் தலா ரூ.7 லட்சமும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தலா ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டது. 

இதற்கான காசோலையை இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

Next Story